ஜப்பான் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர்….
ஜப்பான் ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டோக்கியோவில்பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் சிம் யு ஜின் மோதினர். இதில் சிந்து 15,-21,14,-21 என தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 8-21, 12-21 என தாய்லாந்தின் போர்ன் பாவி சோச்சுவாங்கிடம் சரிந்தார்.முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா 21-15, 18/21,21/18 என சகவீராங்கனை ரக்ஷிதாஸ்ரீயை வென்றார்.முதல் சுற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ,இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் வாங் ஜெங் ஜிங்கை 21–11, 21-18 என வென்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21/18,21/10 என தென் கொரியாவின் காங் மின் ஹயுக், கி டோங் ஜு ஜோடியை வீழ்த்தியது.
0
Leave a Reply